
ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் 'கருப்பு' படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் சூர்யா. இதில் த்ரிஷா, சுவாசிகா, ஷிவதா, யோகிபாபு என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இதையடுத்து தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக மலையாள நடிகை மமிதா பைஜூ நடிக்கிறார் . இதில் 'விடுதலை' படத்தில் சூரி ஜோடியாக நடித்த பவானிஸ்ரீ முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் இரண்டாவது நாயகியாக நடிக்கிறார் என்கிறார்கள்.