
இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி வருவதால், 25 சதவிகித வரி பிளஸ் அபராதத்தை இந்தியா மீது விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மட்டுமல்ல… சீனா, பிரேசில் ஆகிய நாடுகளும் எண்ணெயை வாங்கி வருகிறது.
ட்ரம்பின் இந்த அதிரடி உத்தரவால், இந்தியாவிற்கு என்ன பாதிப்பு என்பதை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.
“நாங்கள் ரஷ்யா மற்றும் ஈரானில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தப்போவதில்லை. எங்கள் நாட்டிற்கு பொருளாதார ரீதியாக எது சரியோ, அதை நாங்கள் தொடர்ந்து செய்வோம் என்று நேற்று திட்டவட்டமாக சீனா கூறிவிட்டது.
உங்கள் மிரட்டலுக்கு பயந்து நாங்கள் ரஷ்யா உடனான வணிகத்தை நிறுத்தி விடமாட்டோம் என்று சீனா தெளிவாக கூறியிருக்கிறது.
ட்ரம்பும், ஆறு இந்திய நிறுவனங்களும்!
இன்னொரு பக்கம், ஈரானுடன் எண்ணெய் ஒப்பந்தம் வைத்திருக்கும் ஆறு இந்திய நிறுவனங்களுக்கு எதிராக ட்ரம்ப் வரி விதித்துள்ளார். இப்படி இந்த ஆறு நிறுவனங்களின் மீது வரி விதிக்கப்படுவது இதுவே முதல்முறை.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால், இந்தியாவிற்கு என்ன லாபம்?
இந்திய பொருளாதாரத்தைப் பொறுத்த வரை, ரஷ்யா மற்றும் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவது நமக்கு பிளஸ்.
இந்த நிலையில், இந்தியா சீனாவைப் போல முடிவு எடுக்குமா அல்லது அமெரிக்கா சொல்வதைக் கேட்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ஆனால், ஒன்று, அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயந்து இந்தியா பின்வாங்கி, பிற நாடுகளில் இருந்து எண்ணெய் வாங்கினால், இங்கு பொதுமக்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும்.
இந்திய அரசு பொதுவாக பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவே குறைக்காது.
கிட்டத்தட்ட 520 நாள்களுக்கு மேலாக, நமது பெட்ரோல், டீசல் விலையில் பெரியளவில் மாற்றம் இல்லை.

உலக அளவில் மாறிய கச்சா எண்ணெய் விலை
உலக அளவில் இந்த 500 நாள்களில் கச்சா எண்ணெய் 60 டாலர் என இறங்கியும் வந்துள்ளது. 70 டாலர் என்று ஏறியும் உள்ளது. ஆனால், இந்தியாவில் உச்ச வரம்பில் பெட்ரோல், டீசல் விற்பனையாகி கொண்டிருக்கிறது.
நாம் பெரியளவில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறோம். பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இதன் விலை குறைவு.
ஈரானிடம் இருந்து வரும் கச்சா எண்ணெயின் விலையும் குறைவு. ஆனாலும், இந்திய அரசு விலையைக் குறைக்கவில்லை. அதில் இருந்து லாபமடைந்து வருகிறது. மேலும், கச்சா எண்ணெயை சுத்தம் செய்து, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துவருகிறது. ஆக, இதிலும் லாபம்.

இந்திய அரசிற்கு இருக்கும் 2 பின்னடைவுகள்
இந்த நிலையில், அரசாங்கம் வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் போது, விலை இன்னமும் அதிகரிக்கும்.
பல மாநிலங்களின் தேர்தல்கள் வர இருக்கும் நிலையில், இது அரசாங்கத்திற்கு பின்னடைவாக இருக்கும்.
இன்னொரு பக்கம், பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் போது, போக்குவரத்து செலவு அதிகரித்து, பணவீக்கமும் உயரும்.
ஆக, ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து இறக்குமதி செய்ய வேண்டுமா என்பது அரசியல் சார்ந்த முடிவு.
இதை அரசாங்கம் மிகவும் யோசித்து தான் செய்ய வேண்டும்” என்றார்.
பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட தினம் தினம் தகவல்களைத் தெரிந்துகொள்ள ‘Vikatan Play‘-ல் ‘Opening Bell Show’ தினமும் காலை கேளுங்கள்.

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…