• August 4, 2025
  • NewsEditor
  • 0

திருநெல்வேலி: ​பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் வீட்​டில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமிக்கு நேற்று இரவு விருந்து அளிக்​கப்​பட்​டது. தமிழகம் முழு​வதும் ‘மக்​களை காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சா​ரப் பயணத்தை மேற்கொண்​டுள்ள பழனி​சாமி நேற்று முன்​தினம் தூத்​துக்​குடி மாவட்​டம் மற்​றும் திருநெல்​வேலி மாவட்​டம் ராதாபுரம் தொகு​தி​யில் பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார். பின்​னர் நெல்லை சந்​திப்​பில் உள்ள ஓட்​டலில் இரவு தங்​கி​னார்.

சுதந்​திரப் போராட்ட வீரர் தீரன் சின்​னமலை​யின் 220-வது நினைவு தினத்​தையொட்​டி, அவரது படத்​துக்கு பழனி​சாமி நேற்று காலை மலர்​கள் தூவி அஞ்​சலி செலுத்​தி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *