
புதுடெல்லி: அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அதிபர் டொனால்டு ட்ரம்ப் விதித்துள்ளார்.
இதுகுறித்து ரஷ்யாவின் செய்தி நிறுவனமான ஆர்டி-க்கு நேற்று அளித்த பேட்டியில் இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் கூறியதாவது: ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல் செய்யக் கூடாது என அமெரிக்கா எச்சரிக்கை செய்துள்ளது. இதுபோன்ற அச்சுறுத்தல்கள் மற்றும் தடைகளை விதிப்பதன் மூலம் அமெரிக்காவானது இந்தியாவுடனான அதன் நல்லுறவுகளை குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது.