
சென்னை: 96 ஆயிரம் கிராமங்களுக்குச் சென்று, நான் வியர்வை சிந்தி உழைத்து உருவாக்கிய கட்சி பாமக. இதற்கு வேறு யாரும் உரிமை கோர முடியாது என்று கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறிய தாவது: உலகத்திலேயே தந்தையை வேவு பார்த்த பிள்ளை இருக்கிறாரா என்றால் இருக்கிறார். என்னை அதுபோல் வேவு பார்த்திருக் கிறார்கள். வேறு யார் வைத்திருக்க முடியும். இது குறித்து காவல் துறை யிடமும், சைபர் குற்றப்பிரிவு போலீ ஸாரிடமும் புகார் கொடுத்துள்ளோம். அந்தக் கருவியையும் காவல் துறை யிடம் ஒப்படைத் துள்ளோம். மேலும், நான் தனியாக சிறப்பு அமைப்பு மூல மாகவும் விசாரணை நடத்தச் சொல்லி யுள்ளேன். அவர்களும் விரைவில் அறிக்கை கொடுப்பார்கள்.