
சென்னை: உடுமலைப்பேட்டையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழந்த சம்பவத்தில், மீண்டுமொரு முறை ‘சாரி’ சொல்லி முதல்வர் ஸ்டாலின் முடித்து விட போகிறாரா என அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்: திருப்பூர் மாவட் டம் உடுமலைப்பேட்டை வனச்சரகர் அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப் பட்ட பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் மர்ம மான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது. சில நாட்களுக்கு முன்பு காவல் துறையினரால் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாரின் மரணச் சுவடு மறையும் முன்னரே மீண்டும் அதே பாணியில் அடுத்த அப்பாவியின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் வலுவடையத் தொடங்கி யுள்ளது. மீண்டுமொரு முறை “சாரி” சொல்லி முடித்துவிடப் போகிறாரா ஸ்டாலின்?