
ராமதாஸ் – அன்புமணி மோதல் விவகாரம் முடிவுறாத கதையாக நீண்டுகொண்டிருக்கிறது. இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்த வண்ணமிருக்கிறார்கள்.
கடந்த மாதம், “என் வீட்டிலேயே, நான் உட்கார்ந்திருக்கும் இடத்திலேயே ஒட்டுக் கேட்கும் கருவியை வைத்துள்ளனர். நேற்றைக்கு முன் தினம்தான் அதைக் கண்டுபிடித்தோம். அது லண்டனில் இருந்து வந்தது என்று கூறுகிறார்கள். அது அதை யார், எதற்காக வைத்தார்கள் என்பதை ஆராய்ந்து வருகிறோம்” என்று பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
தற்போது இந்த விவகாரம் குறித்து சென்னை ஆழ்வார்பேட்டையில் பேட்டியளித்திருக்கும் ராமதாஸ், “எனது தைலாபுர வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவியை வைத்தது என் மகன் அன்புமணிதான். உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான். ஒட்டுக் கேட்புக் கருவியை காவல்துறையிடம் ஒப்படைத்து புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. விழுப்புரம் காவல்துறை, சைபர் குற்றப்பிரிவு அனைத்திலும் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. தனிப்பட்ட முறையில் நானும் சிறப்புகுழு அமைத்து நடவடிக்கை எடுக்கவிருக்கிறேன். இந்த விவகாரத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுவாக ஒரு பொதுக்குழு கூட்ட வேண்டும் என்றால் 15 நாள்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டு, கட்சிதலைமையிடம் அனுமதி பெற்று நடத்த வேண்டும். அன்புமணி நடத்தும் பொதுக்குழு, நடைபயணம் அனைத்தும் ‘பாமக’ விதிகளுக்கு எதிரானது.” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டிப் பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs