
சென்னை: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் இன்று தொடங்குவதாகவும் பரிசோதனை முடிவுகள் வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் என்றும் அரசு செயலர்கள் ஜெ.ராதாகிருஷ்ணன், ப.செந்தில்குமார் தெரிவித்தனர். நலம் காக்கும் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இந்நிலையில், இந்த திடம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை தொடர்பு அதிகாரியும், மின்வாரிய தலைவருமான ஜெ.ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை செயலர் ப.செந்தில்குமார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொடக்கத்தில் தொற்று நோய்கள் அதிகமாக இருந்தன.