
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இன்று (ஆகஸ்ட் 2) இந்த மருத்துவ முகாம் திட்டத்தினை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சிறப்பு முகாம்கள்
இத்திட்டத்தின்படி மாவட்டம் தோறும் அரசு விடுமுறை இல்லாத நாட்களில், குறிப்பாக சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை இந்தத் திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகள், இருதய நோய்கள், மனநலன் பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள் உள்ளிட்ட அனைவருமே இந்த முகாம்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த மாதம் முதல் வரும் பிப்ரவரி வரை முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகும் தேவைப்பட்டால் முகாம்கள் நடத்தப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.
இதய நோயாளிகளுக்கு முன்னுரிமை
இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தபின் பேசிய முதல்வர் ஸ்டாலின், “நான் நல்ல இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க? இன்று தொடங்கப்பட்ட நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் மாற்றுத்திறனாளி, மனநலப் பாதிப்பு, இதய நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உடல் நலமாக இருந்தால்தான் மகிழ்ச்சியோடு வாழ முடியும்.
எந்த ஒரு திட்டம் கொண்டு வந்தாலும் அதில் ஒருவர் கூட விடுபடக்கூடாது என்பதுதான் எங்களது நோக்கம். என்னைப் பொறுத்தவரை அரசின் திட்டங்களை ஒவ்வொரு தனிநபரையும் சென்றடைய வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளுக்கும் சிறந்த மருத்துவம் கிடைக்க வேண்டும்.
நகர்ப்புறங்களில் கிடைக்கும் மருத்துவ சேவை கிராமப்புற மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் புதிய திட்டம் இது. மருத்துவமனைக்குச் செல்ல முடியாதவர்களுக்கும் மருத்துவ சேவை அளிக்கவே ‘நலன் காக்கும் ஸ்டாலின்’ திட்டம்” என்று பேசியிருக்கிறார்.

இனி மருத்துவப் பயனாளிகள்
மேலும், “நோயாளிகளை இனி மருத்துவப் பயனாளிகள் என்று அழைக்க வேண்டும். முகாமுக்கு வருவோரைக் கனிவோடும் பணிவோடும் மருத்துவப் பணியாளர்கள் நடத்த வேண்டும் நகர்ப்புற மருத்துவ சேவை கிராமங்களிலும் கிடைக்க வேண்டும் என்பதே நமது அரசின் குறிக்கோள்.
உடல் உறுப்புகள் தானம் தருவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது. எதிலும் எப்போதும் தமிழ்நாடு நம்பர் ஒன். மருத்துவ சேவைகளிலும் தமிழ்நாடு நம்பர் ஒன்” என்று மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs