
சென்னை: கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களில் ஈடுபட்ட மூத்த கல்வியாளரும், முன்னாள் துணைவேந்தருமான வே.வசந்தி தேவி சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 87. வசந்தி தேவி 1938-ம் ஆண்டில் திண்டுக்கல்லில் பிறந்தார். ராணி மேரி கல்லூரியில் பேராசிரியை பணியில் சேர்ந்த அவர், 1988 முதல் 1990-ம் ஆண்டு வரை கும்பகோணத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரியின் முதல்வராக பணியாற்றினார்.
1992 முதல் 1998-ம் ஆண்டு வரை இவர் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றினார். அதன்பின் 2002 முதல் 2005 ம் ஆண்டு வரை தமிழகத்தின் மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராகவும் இருந்தார். குறிப்பாக 1980-களின் இறுதியில் உசிலம்பட்டி பெண் சிசுக்கொலைகளை, களத்துக்குச் சென்று தரவுகளோடு ஆவணப்படுத்தினார்.