• August 2, 2025
  • NewsEditor
  • 0

சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த 59 வயதான மார்க் க்ரிகுயர் என்பவர் 28 ஆண்டுகளாக மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.

கடந்த 18 ஆண்டுகளில் நான்கு முறை அவர் தனது வேலையை இழந்துள்ளார். சமீபத்தில், வால்மார்ட் குளோபல் டெக் நிறுவனம் 1,500 பணியிடங்களைக் குறைத்தபோது, அவரும் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஆரம்ப கால ஆர்வம்

மார்க்குக்கு 10 வயதாகும்போதே கணினி மீது ஆர்வம் தொடங்கியிருக்கிறது. புரோகிராம்களின் பிழைகளைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்ட அவர், 28 ஆண்டுகளுக்கு முன்பு மென்பொருள் துறையில் பணியைத் தொடங்கியிருக்கிறார். 2008-ல் சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தில் தனது முதல் வேலை இழப்பைச் சந்தித்திருக்கிறார். இதுபோன்று நான்கு முறை வெவ்வேறு நிறுவனத்தில் வேலையை இழந்திருக்கிறார்.

AI-யின் பங்கு

செயற்கை நுண்ணறிவு மென்பொருள் துறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஆனால், வேலை இழப்புகளுக்கு AI முக்கிய காரணம் இல்லை என மார்க் கருதுகிறார். AI வரும் காலங்களில் அதனையும் மாற்றும் என அவர் எச்சரிக்கிறார்.

வேலை இழப்பின் காரணங்கள்

”நிறுவனங்கள் வேகமாக அதிகமானவர்களைப் பணியமர்த்துகின்றன. தொழில்நுட்ப முன்னேற்றங்களைவிட, அதிகப்படியான பணியமர்த்தல் மற்றும் செலவு குறைப்பே வேலை இழப்புக்கு முக்கிய காரணங்கள்” என அவர் கூறியிருக்கிறார்.

தொழில்நுட்பத் துறையில் அனுபவமிக்கவர்களும் சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பதை இதுபோன்ற சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *