
சென்னை: அரசு திட்டங்களுக்கு ஸ்டாலின் பெயரை பயன்படுத்தக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவுக்கு தமிழக பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு, கட்சி விளம்பர பாணியில் ‘ஸ்டாலின்’ பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்ற தீர்ப்பை வழங்கியதன் மூலம், மக்கள் பணத்தில் திமுக அரசு செய்யும் வெற்று விளம்பரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தொடர்ந்த இவ்வழக்கில் கிடைத்த இந்தத் தீர்ப்பு வரவேற்புக்குரியது.