• August 2, 2025
  • NewsEditor
  • 0

2023ம் ஆண்டு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 71வது தேசிய திரைப்பட விருதுகளின் அறிவிப்பு வெளியாகியிருக்கின்றன. அதில், இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பிய ‛தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது.

அந்த படத்தின் இயக்குநர் சுதிப்தோ சென்னுக்கு சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதும், படத்தின் ஒளிப்பதிவாளர் பிரசந்தனு மொஹபத்ராவுக்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

The Kerala Story | தி கேரளா ஸ்டோரி | பிரதமர் மோடி

இந்திய அரசின் அங்கிகாரமாகக் கருதப்படும் தேசிய விருதை தி கேரளா ஸ்டோரி போன்ற மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து, சர்ச்சையை ஏற்படுத்திய படத்துக்கு வழங்கப்படுவதை கேரள முதல்வர் பினராயி விஜயன் கடுமையாக சாடியிருக்கிறார்.

சங் பரிவாரின் பிளவுபடுத்தும் சித்தாந்தம்

அவரின் எக்ஸ் பக்கத்தில், “கேரளாவின் நற்பெயரை கெடுக்கும், வகுப்புவாத வெறுப்பை விதைக்கும் தெளிவான நோக்கத்துடன் அப்பட்டமான தவறான தகவல்களைப் பரப்பும் ஒரு திரைப்படத்தை கௌரவிப்பதன் மூலம், தேசிய திரைப்பட விருதின் நடுவர் குழு, சங் பரிவாரின் பிளவுபடுத்தும் சித்தாந்தத்தில் வேரூன்றிய ஒரு கதைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக எப்போதும் நல்லிணக்கம் மற்றும் எதிர்ப்பின் கலங்கரை விளக்கமாக நிற்கும் நிலமான கேரளா, இந்த முடிவால் கடுமையாக அவமதிக்கப்பட்டுள்ளது. மலையாளிகள் மட்டுமல்ல, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் உண்மை மற்றும் நாம் விரும்பும் அரசியலமைப்பு மதிப்புகளைப் பாதுகாக்க தங்கள் குரலை எழுப்ப வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *