
பெங்களூரு: கர்நாடகாவில் ரூ.15 ஆயிரம் ஊதியமாக பெற்ற முன்னாள் எழுத்தர் ஒருவரின் வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 24 வீடுகள், 4 வீட்டு மனைகள், 40 ஏக்கர் நிலம் ஆகியவற்றின் ஆவணங்களும், ரூ.14 லட்சம் ரொக்கம், 350 கிராம் தங்க நகைகள், 1.5 கிலோ வெள்ளிப் பொருட்கள், 4 வாகனங்களும் சிக்கின.
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் ஊரக மேம்பாட்டு வாரியத்தில் எழுத்தராக பணியாற்றிய காளகப்பா நித‌குன்ட்டி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லோக் ஆயுக்தா போலீஸாருக்கு புகார் வந்தது. அவர் தற்காலிக ஊழியராக மாதம் ரூ.15 ஆயிரம் ஊதியம் பெற்றுவந்த நிலையில், முன்னாள் அரசு பொறியாளர் சின்சோல்கருடன் இணைந்து ரூ.75 கோடி மதிப்பிலான அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்வதாக ஒப்பந்ததாரர்களிடம் பணம் வசூலித்ததாகவும் அதில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.