
இந்தி நடிகையான ஊர்வசி ரவுதெலா, தமிழில் ‘லெஜண்ட்’ படத்தில் நடித்துள்ளார். தெலுங்கிலும் நடித்துள்ள அவர், சமீபத்தில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியைப் பார்க்க லண்டன் சென்றார். அங்கு கேட்விக் விமான நிலையத்தில் ‘பேக்கேஜ் பெல்டி’ல் இருந்து அவருடைய சொகுசு சூட்கேஸ் திருடப்பட்டுள்ளது. அதில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள நகைகள் இருந்ததாகக் கூறியுள்ள அவர், இது தொடர்பாக எமிரேட்ஸ் விமான நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளார். அவர்கள் தரப்பில் எந்த உதவியும் வரவில்லை என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் இதுபற்றி பகிர்ந்துள்ள ஊர்வசி ரவுதெலா, “பேக்கேஜ் பெல்ட்டில் இருந்து சூட்கேஸ் திருடப்பட்டிருப் பது வருத்தமளிக்கிறது. இது விமான நிலைய பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கும் செயல். இது அனைத்து பயணிகளுக்குமான பாதுகாப்பு பற்றிய விஷயம்” என்று கூறியுள்ளார்.