
சென்னை: எங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் வந்து இணைவதால், தொகுதி பங்கீட்டில், பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது. அதை முதல்வர் பார்த்துக் கொள்வார் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். சென்னை அடையாறில் விசிக மாணவரணி சார்பில் ‘மதச்சார்பின்மை காப்போம்’ என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் திருமாவளவன் பேசியதாவது: நாம் பேசுவது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்னும் பொறுப்பை உணர்ந்து பேசுவதே தலைமைப் பண்பு. தூண்டிவிட்டு போய்விடலாம். அது சாதி கலவரமாக மாறிவிடும். அது துப்பாக்கிச்சூடு வரை செல்லக்கூடும். அந்த பாதிப்புகள் யாருக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்னும் பொறுப்புணர்வு தேவை.