
மதுரையில் நடந்த பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஏற்கனவே ஓபிஎஸ்ஸிடமும் தினகரனிடமும் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். சட்டமன்றத்தில் சந்திக்கும் போதும், போனிலும் ஓபிஎஸ்-சிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன், அவருக்கு வேறு எதுவும் பிரச்னையா எனத் தெரியவில்லை. அதை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்” என்றவரிடம்,
“மோடியை சந்திக்க அனுமதி தரவில்லை என்பதால்தான் வெளியேறியதாக கூறப்படுகிறதே..” என்ற கேள்விக்கு,
“என்னிடம் சொல்லியிருந்தால் நான் வாங்கி தந்திருப்பேன்”
“இபிஎஸ்-சின் அழுத்தத்தால்தான் ஓபிஎஸ் வெளியேறினாரா?” என்று கேள்விக்கு,
“அப்படி ஒன்றும் இல்லை, ஓபிஎஸ் எடுத்த முடிவு குறித்து நான் கருத்து சொல்ல முடியாது”
“ஓபிஎஸ் விலகல், உங்கள் கூட்டணிக்கு பலவீனத்தை ஏற்படுத்துமா?” என்ற கேள்விக்கு
“அது தேர்தலில் தான் தெரிய வரும்..”
“மோடி மீண்டும் தமிழகம் வரும்போது ஓபிஎஸ் சந்திக்க வைக்க வாய்ப்பு உள்ளதா?’ என்ற கேள்விக்கு
“ஓபிஎஸ் தரப்பில் இருந்து கேட்டால் கண்டிப்பாக சந்திக்க வைப்போம்.” என்றார்.