
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு, ஏஐயால் இயக்கப்படும் சாட்பாட் தொழில்நுட்பங்கள் எந்தெந்த தொழில்களை மாற்றியமைக்க வாய்ப்புள்ளது என்பது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
மைக்ரோசாப்டின் கோபைலட் (Copilot) சாட்பாட்டின் தரவுகளை ஆய்வின் அடிப்படையிலான இந்த ஆராய்ச்சி, தகவல் பரிமாற்றம் தொடர்பான தொழில்களில் AI-இன் தாக்கம் அதிகமாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வின்படி, மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பு வல்லுநர்கள் முதலிடத்தில் உள்ளனர்
இதைத் தொடர்ந்து வரலாற்றாசிரியர்கள், பயணிகள் உதவியாளர்கள், சேவை விற்பனைப் பிரதிநிதிகள் அடுத்தடுத்து உள்ளனர்.
இந்தப் பட்டியலில் டிக்கெட் முகவர்கள், வானொலி தொகுப்பாளர்கள், டெலிமார்க்கெட்டர்கள், செய்தி ஆய்வாளர்கள், அரசியல் விஞ்ஞானிகள், எடிட்டர்கள், மக்கள் தொடர்பு நிபுணர்கள் மற்றும் தரவு விஞ்ஞானிகள் ஆகியோர் இடம்பெறுகின்றன. இதில் தகவல் தொடர்பு, கல்வி, நிதி மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளும் இடம்பெறுகின்றன.
கோபைலட் மற்றும் சாட்ஜிபிடி (ChatGPT) போன்ற AI அமைப்புகள் இந்தப் பணிகளை ஆதரிக்கின்றன. எதிர்காலத்தில் இவை முழுமையாக மாற்றவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் முடிவுகள், ஏஐயின் தாக்கத்தால் இந்தெந்த வேலைகள் இழக்கப்படலாம் அல்லது புதிதாக உருவாக்கப்படலாம் என்பது குறித்து தெளிவான முன்னறிவிப்புகளை வழங்கவில்லை என்றாலும் ஏஐயின் தாக்கம் எதிர்காலத்தில் ஒரு இன்றியமையாதவையாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த புதிய யுகத்திற்கு தயாராக வேண்டும் என்பதே இந்த ஆய்வின் தகவல்களாக உள்ளன.