
சென்னை: சென்னையில் மின்சாரப் பேருந்துகள் மூலம் எரிபொருள் செலவு ரூ.90 லட்சம் சேமிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை முதல்கட்டமாக கடந்த மாதம் 30-ம் தேதி சென்னை வியாசர்பாடி பணிமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அந்த வகையில் சென்னையில் இயக்கப்படும் மின்சார பேருந்துகளில் கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கி இந்த மாதம் 28-ம் தேதி வரை 12.80 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.