
ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவின்குமாரின் பெற்றோருக்கு நேரில் சென்று திமுக எம்பி கனிமொழி ஆறுதல் தெரிவித்திருக்கிறார்.
அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கனிமொழி, “இப்படிபட்ட ஆணவப்படுகொலைகள் நடக்கக்கூடாது என்பதுதான் நம் சமூகத்தின் உணர்வாக இருக்கிறது. இந்த மாதிரியான ஒரு நிகழ்வு நடந்திருக்கக்கூடாது.
ஒரு பெற்றோர்கள் தங்களுடைய இளம் மகனை இழந்து தவித்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் துணையாக நிற்கிறோம் என்று முதலமைச்சர் சார்பில் நேரில் சந்திக்க வந்திருக்கிறோம்.
நிச்சயமாக அவர்களுக்கு ஒரு நியாயம் கிடைக்கக்கூடிய ஒரு சூழலை திமுக அரசு உருவாக்கி தரும் என்ற நம்பிக்கையைத் தருவதற்காகத்தான் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். முதலமைச்சர் இதனை சிபிசிஐடி-க்கு மாற்றி இருக்கிறார்கள். நிச்சயமாக கவினின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும்” என்று கனிமொழி தெரிவித்திருக்கிறார்.