• July 30, 2025
  • NewsEditor
  • 0

ராஜஸ்தானைச் சேர்ந்த கமல் அகர்வால் மற்றும் அவரது நீண்டநாள் காதலி ரூச்சி, பிரமாண்டமான திருமண விழாக்களைத் தவிர்த்து, எளிமையான நீதிமன்றத் திருமணத்தை மேற்கொண்டு இணையவாசிகளிடம் கவனம் பெற்றுள்ளனர்.

பல லட்சங்கள் செலவு செய்து நடைபெறும் திருமணங்களுக்கு மத்தியில், இவர்களது திருமணம் வெறும் 1,592 ரூபாயில் நிறைவடைந்ததுள்ளது.

Rep image

கமல் தனது ரெடிட் பதிவில், தனது அண்ணனின் “எளிமையான” திருமணத்தைக் கண்டு, இதுபோன்ற பாதையைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறியுள்ளார்.

அவரது வலைப்பதிவின்படி, இந்தத் தம்பதி ஏப்ரல் 17, 2025 அன்று திருமண அறிவிப்புப் படிவத்தைச் சமர்ப்பித்து, மே 28 அன்று பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களின் சமீபத்திய பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இவர்களது திருமணத்திற்கு ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் சில முத்திரைத் தாள்கள் மட்டுமே தேவைப்பட்டுள்ளன.

ஆடம்பர உடைகள் போன்றவற்றைத் தவிர்த்த இவர்கள், மே 28 அன்று திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். முத்திரைத் தாள்களுக்கு ரூ.320, நோட்டரிக்கு ரூ.400, அவசர புகைப்படங்களுக்கு ரூ.260, அறிவிப்புப் படிவ அச்சிடலுக்கு ரூ.290 என அந்த திருமணத்திற்காக அவர்கள் செலவு செய்த 1,592 ரூபாய் குறித்தும் அவர்கள் விவரித்துள்ளனர்.

இவர்களது 1,592 ரூபாய் திருமணம் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *