• July 30, 2025
  • NewsEditor
  • 0

மும்பை அருகில் உள்ள நவிமும்பையில் பள்ளி ஆசிரியை (35) ஒருவர் இரவு நேரத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் வீடியோ காலில் நிர்வாணமாக ஆபாசமாக பேசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கோபர்கைர்னே பகுதியில் வசிக்கும் அந்த மாணவன் 10 வகுப்பு படித்து வருகின்றான். அவன் இரவு நேரத்தில் அடிக்கடி வீடியோ காலில் பேசுவதை அவனது தாயார் பார்த்தார். இதையடுத்து சந்தேகம் அடைந்த மாணவனின் தாயார் தனது மகனின் மொபைலில் இருந்த வீடியோ கால் பதிவுகளை ஆய்வு செய்தபோது ஒரு பெண்ணுடன் வீடியோ காலில் ஆபாசமாக பேசிக்கொண்டிருப்பது தெரிய வந்தது. வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோது அப்பெண் தனது ஆடைகளை களைந்து அந்தரங்க உறுப்புகளை காட்டுவது போன்று வீடியோ காட்சிகள் இருந்தது.

இதையடுத்து மாணவனிடம் அப்பெண் யார் என்று விசாரித்த போது அது ஆசிரியை என்று தெரிய வந்தது. அங்குள்ள உல்வே பகுதியில் இருக்கும் பள்ளியில் அப்பெண் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இது குறித்து மாணவனின் பெற்றோர் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 35 வயது ஆசிரியையை கைது செய்தனர். போலீஸார் அந்த ஆசிரியை மொபைல் போனை பறிமுதல் செய்து அதனை சோதனை செய்து பார்த்தபோது மேலும் இரண்டு மாணவர்களிடம் கடந்த ஒரு ஆண்டாக இது போன்று வீடியோ காலில் பேசி வந்தது தெரிய வந்தது.

ஆனால் அந்த மாணவனின் பெற்றோர் புகார் கொடுக்க முன்வரவில்லை. கைது செய்யப்பட்ட ஆசிரியை 5-7ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார். இது தவிர 10-வது வகுப்பு மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையிலும் கோச்சிங் கொடுத்து வந்தார். அப்படி வரும் மாணவர்களுடன் இன்ஸ்டாகிராம் மூலமும் ஆசிரியை தொடர்பில் இருந்துள்ளார். அப்படி ஏற்பட்ட தொடர்புதான் இப்போது நிர்வாண வீடியோ காலில் வந்து நின்றது.

கடந்த இரண்டு வாரத்திற்கு முன்புதான் மும்பையில் பிரபல பள்ளியில் பணியாற்றிய ஆசிரியை மாணவனை காரில் அழைத்துச் சென்று நட்சத்திர ஹோட்டல்களில் உல்லாசமாக இருந்ததாக கைது செய்யப்பட்டார். ஆனால் அந்த ஆசிரியையின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம், இருவரும் விருப்பப்பட்டுத்தான் உறவில் ஈடுபட்டனர் என்று கூறி ஆசிரியையை ஜாமீனில் விடுதலை செய்தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *