• July 28, 2025
  • NewsEditor
  • 0

இரண்டுநாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்த மோடி, சனிக்கிழமை துத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட புதிய விமான நிலைய முனையத்தைத் திறந்து வைத்தார். நேற்று கங்கை கொண்ட சோழபுரத்தில் மாமன்னன் இராஜேந்திர சோழனின் பிறந்தநாள் ஆடி திருவாதிரை விழாவில் கலந்துகொண்டிருந்தார்.

சனிக்கிழமை இரவே திருச்சி விமான நிலையத்திலே அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மோடியை வரவேற்றுப் பேசினார். அ.தி.மு.க தரப்பில் விமான நிலையத்திலிருந்து திருச்சியில் மோடி தங்கியிருந்த நட்சத்திர விடுதி வரையிலும் தொண்டர்களால் வரவேற்பு வழங்கப்பட்டது.

‘பா.ஜ.க, அ.தி.மு.க’ வைச் சேர்ந்த பலரும் நேற்றைய ஆடி திருவாதிரை விழாவில் கலந்துகொண்டிருந்தனர். ஆளுங்கட்சி சார்பாக ‘தி.மு.க’விலிருந்து தங்கம் தென்னரசு கலந்துகொண்டு மத்திய அரசு தரவேண்டிய கல்வி நிதியை உரிய முறையில் தர வேண்டும் என்றும் பல பகுதிகளில் ரயில் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கைகளை வழங்கி, நினைவு பரிசினையும் வழங்கியிருந்தார். முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்ததால் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டது.

வன்னி அரசு – VCK

இவ்விழாவில் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு, மோடியுடன் மேடையில் அமர்ந்திருந்தார். பா.ஜ.க – அதிமுக கூட்டணிக்கு எதிராக இருக்கும் தி.மு.க கூட்டணியில் இருக்கும் திருமா, தேர்தல் நெருங்கும் நேரத்தில் மோடியுடன் மேடையில் அமர்ந்திருந்தது பேசுபொருளாகியிருந்தது. மேலும், விழா முடிந்தபின் செய்தியாளர்களிடம், “பிரமர் மோடி விழாவில் அறிவித்த அறிவிப்புகளை வரவேற்கிறேன். இந்தத் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் எனும் அடிப்படையில் விழாவில் கலந்து கொண்டேன்” என்று கூறியிருந்தார்.

ஆனால், பா.ஜ.க-வை, மோடியைக் கடுமையாக விமர்சித்த திருமா, விழாவில் மோடியின் அருகில் அமர்ந்தது, அவரது அறிவிப்பை வரவேற்றுப் பேசியது திமுக கூட்டணியில் விரிசல் என்ற விவாதத்தை கிளப்பியது.

மோடி, திருமா

இந்நிலையில் இதற்கு விளக்கமளித்திருக்கும் விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, “முதலாம் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழாவில் பிரதமர் என்ற முறையில் நரேந்திர மோடி பங்கேற்றார். சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.

இதில் எந்த அரசியலும் இல்லை. தொகுதியில் நடக்கும் அரசு விழாக்களில் பங்கேற்பது மரபு. அந்தவகையில்தான் விசிக தலைவர் திருமாவளவன் நேற்றைய விழாவில் பங்கேற்றார்” என்று விளக்கமளித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *