
சென்னை: 230, 110 கே.வி. மின் கம்பிகளை தொடர்ந்து கண்காணிக்க மின் தொடரமைப்பு கழகம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக மின்வாரியம் சென்னை போன்ற பெரிய நகரங்களில் புதைவட மின் கம்பிகள் வாயிலாக ஒவ்வொரு பகுதிக்கும் மின்சாரம் விநியோகம் செய்து வருகிறது.
அனைத்து மின் பகிர்மான வட்டங்களிலும் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்றார்போல அருகாமையில் உள்ள துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.