• July 28, 2025
  • NewsEditor
  • 0

கங்கை கொண்ட சோபுரத்தில் நடைபெற்ற இராஜேந்திர சோழன் திருவாதிரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதற்காக திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கை கொண்ட சோழபுரம் அருகே உள்ள பொன்னேரியில் அமைக்கப்பட்ட ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கினார். பின்னர் காரில் நின்றவாறே நான்கு கிலோ மீட்டர் ரோடு ஷோ சென்றார். அப்போது சாலையின் இருபுறமும் இருந்த மக்கள் மலர்களை தூவி வரவேற்ப்பு அளித்தனர்.

கங்கை கொண்ட சோழபுரத்தில் மோடி

கோயில் வளக்காத்தில் அமைப்பட்ட பந்தலில் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயிலுக்குள் சென்ற மோடி சாமி தரிசம் செய்தார். பின்னர் மூலவருக்கு தீபாரதணை காட்டினார்.

இதையடுத்து நடந்த இளையராஜாவின் ஆன்மிக இசை நிகழ்ச்சியை கைத்தட்டி ரசித்தார். இராஜேந்திர சோழனை கௌரவிக்கும் வகையில் அவரது நினைவு நாணயத்தைப் வெளியிட்டார்.

இதைதொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, வணக்கம் சோழமண்டலம் என தொடங்கினார். மேடையில் இருந்தவர்களை வரவேற்றார். இளையராஜாவை சகா என்றார்.

பிரதமர் மோடி பேசியதாவது, “நயினார் நாகேந்திரன் பெயர் கூறப்படும்போது உங்களிடம் உற்சாக கொப்பளிப்பை நான் கவனித்தேன். இது ராஜராஜசோழனின் இடம். இந்த இடத்தில் என் சகா இளையராஜாவின் இசை சிவபக்தி, இந்த மழைகாலத்திலேயே மிகவும் சுவாராஸ்யமாக இருந்தது. நான் காசியின் நாடாளுமன்ற உறுப்பினர். இந்த சிவகோஷத்தை கேட்கும் போது உள்ளுக்குள்ளே மிகவும் பரவசமாக இருக்கின்றது.

இளையராஜாவின் இசை இந்த ஆன்மீக அனுபவம் என் ஆன்மாவை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தி விட்டது. பிரகதீஸ்வர் சிவாலய நிர்மாணம் கட்டபட்டு ஓர் ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது. இது வரலாற்று பூர்வமான சந்தர்ப்பம். நான் இந்த சரித்திர ஆலயத்திலே 140 கோடி நாட்டு மக்களின் நலனுக்காகவும், நாட்டின் நிரந்தர வளர்ச்சிக்காகவும் வேண்டுதலை முன்வைத்தேன்.

பாரத அரசின் கலாச்சார அமைப்பகம் ஒரு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. மிகவும் அற்புதமான கண்காட்சி அதை நான் பார்வையிட்ட பிறகு என் நெஞ்சத்தில் பெருமிதம். மனித சமுதாய நான்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த வெளிப்பாடுகளை பார்த்து நான் வியப்படைந்தேன். கண்காட்சியை பார்வையிட்டதால் தாமதமாக வந்தேன்.

மோடி ரோடு ஷோ

சின்மயா மிஷனின் முயற்சியின் காரணமாக தமிழ் மொழியில் பவத்கீதை இசை தொகுப்பை வெளியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சோழ அரசர்கள் தங்களுடைய அரசியல் மற்றும் வியாபார தொடர்புகளின் விரிவாக்கத்தை இலங்கை, மாலத்தீவுகள் மற்றும் தென்கிழக்கு ஆசியா வரை செய்திருந்தார்கள் நான் நேற்று மாலத்தீவில் இருந்து திரும்பி வந்தேன். இன்று தமிழ்நாட்டில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் உவப்படைகிறேன்.

பாரதத்தின் அடையாளங்கள்..

சிவனை வழிபாடு செய்பவன் அவனை போலவே அழிவற்றவமான மாறுவதாக சாஸ்திரங்கள் ஓங்கி ஒலிக்கின்றன. சோழர்களின் பாரம்பர்யம் கூட இன்று அமரத்துவம் அடைந்து விட்டன. ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் இந்த பெயர்கள் பாரதத்தின் அடையாளங்கள். கெளரவத்தின் இணைச்சொற்கள். சோழப்பேரரசு, சோழ சாம்ராஜ்யத்தின் வரலாறு மற்றும் பாரம்பர்யம் இவை பாரதத்தின் மெய்யான பிரகடனங்கள். இன்று நான் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி முனேற்றம் கண்டு வருகிறோம்.

மோடி

சோழ சாம்ராஜ்ஜியம்..

கடந்த சில தினங்களில் ஆடி திருவாதிரை உற்சவத்தை கொண்டாடினீர்கள். இன்று அதன் நிறைவு இந்த மகத்தான நிழச்சி வாயிலாக நடைபெறுகிறது. இதற்கு தோள் கொடுத்த அனைவருக்கும் நல்வாழ்த்துகள். சோழ சாம்ராஜித்தின் காலக்கட்டம் பாரததின் பொற்காலமாக இருந்ததாக கருதுகிறார்கள்.

இந்த காலக்கட்டம் அவர்களர்து போர் திறன் வலிமையால் அளக்கப்படுகிறது. மக்களாட்சி என்று சொன்னால் பிரிட்டனின் மேக்னா கார்டாவை பற்றி பேசுவார்கள். பல நூற்றாண்டுகள் முன்பாகவே சோழ சாம்ராஜ்யத்தில் குடவோலை முறை வாயிலாக ஜனநாயக வழி முறைப்படி தேர்தல்கள் நடந்தன. இன்று நீர் மேலாண்மை, சூழலியல் பாதுக்காப்பு பற்றிய ஏராளமான விவாதங்கள் நடக்கின்றன. நமது முனோர்கள் மிக பழமையான காலத்தில் கூட இதன் மகத்துவத்தை நன்கு அறிந்து வைத்து இருந்தார்கள்.

ராஜேந்திர சோழனுடைய அடையாளம்..

மற்ற இடங்களில் இருந்து தங்கம் வெள்ளி பசுக்கள் அல்லது பிற கால்நடைகள் கவர்ந்து வந்த அரசர்கள் பற்றி கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் ராஜேந்திர சோழனுடைய அடையாளம் புனித கங்கை நீரை கொண்டு வந்ததோடு இருக்கிறது. ராஜேந்திர சோழன் கங்கை நீரை கொண்டு சோழகங்கம் ஏரியில் நிரப்பினான். இது இன்று பொன்னேரி என அழைக்கப்படுகிறது. கங்கை கொண்ட சோழபுரம் கோயில் கட்டிடவியலுக்கு அற்புதமாக திகழ்கிறது. அன்னை காவிரி பெருகி பாயும் இந்த பூமியில், அன்னை கங்கைக்கு திருவிழா எடுக்கப்படுவதும் கூட சோழ சாம்ராஜ்யத்தின் நன்கொடையாகும்.

மோடி

நான் காசியின் மக்கள் பிரதிநிதி. கங்கை நதியிடம் எனக்கு ஆன்மிக ரீதியான அன்பு இருக்கின்றது. சோழ அரசர்களின் இந்த செயல், அதோடு இணைந்த இந்த ஏற்பாடு ஒரே பாரதம், உன்னதம் பாரதம் என்ற பெருவெளியை போன்றது. சோழ அரசர்கள் பாரதத்தை கலாச்சார ஒற்றுமை என்ற இலை கொண்டு இணைத்தார்கள். நம் அரசு சோழர்களின் எண்ணங்களை கருத்துகளை முன்னெடுத்து செல்கிறது. கங்கை கொண்ட சோழபுரம் போன்ற பண்டைய கோயில்கள் இந்திய தொல்லியல் துறை வாயிலாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

தேசத்தின் புதிய நாடாளுமன்றம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வேளையில், நமது சிவாதீனங்கள் புனிதர்கள் அந்த நிகழ்ச்சியில் ஆன்மீக தலைமையை ஏற்றனர். அவர்கள் உங்கள் மத்தியில் வீற்றிருகின்றனர். தமிழ் கலாச்சாரத்தோடு இணைந்த புனிதமான செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது. அந்த கணங்களை இன்று நினைத்தால் கூட என் நெஞ்சம் பெருமிதத்தில் பொங்குகிறது. நான் சிதம்பரம் கோயில் நடராஜர் சாமியின் ஆனந்த தாண்டவ மூர்த்தி ஜி20யின் போது நாடாளுமன்றத்தில் அழகுக்கு அழகு சேர்த்தது.

கோயிலில் மோடி

சைவ சித்தாந்தம் தீர்வளிக்கும் பாதை..

நமது சைவ பார்ம்பர்யம் பாரத்தின் காலாச்சார நிர்மாணத்திலே மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றியிருக்கிறது. சோழப்பேரசர்கள் முக்கியமான சிற்பிகளாக விளங்கினார்கள். அதனால் தான் இன்று கூட சைவ பாரம்பர்யத்தின் உயிர்ப்புடைய மையங்களில் தமிழ்நாடு மிகவும் முக்கியமானது.

பெருமை மிக்க நாயன்மார்களின் மரபு, பக்தி காப்பியங்கள் சொம்மொழியாம் தமிழ் மொழியின் இலக்கியம், ஆதினங்களின் பங்களிப்பு புதிய யுகத்திற்கு பிறப்பளித்திருக்கின்றனர். இன்று உலகம் நிலையில்லா தன்மை, வன்முறை மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகளில் உழன்று வரும் வேளையில் சைவ சித்தாந்தம் நமக்கு தீர்வளிக்கும் பாதையை காட்டுகிறது.

அன்பே சிவம் என்றார் சித்தர் திருமூலர். இந்த கோட்பாட்டை உலகம் முழுவதும் கடைபிடித்தால் பெரும்பாலான சங்கடங்கள் தானாக தீர்ந்து விடும். இந்த எண்ணத்தை பாரதம் ஓர் உலகம், ஓர் குடும்பம், ஓர் எதிர்காலம் என்ற வகையில் முன்னெடுத்துச் செல்கிறது. இன்றைய பாரதம் வரலாற்றின் மீது பெருமிதம் கொண்டிருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் தேசத்திஜன் பாரம்பர்யத்தை பாதுக்காக்கும் வகையில் பணியாற்றி வந்திருக்கிறோம்.

இராஜேந்திர சோழன் திருவாதிரை விழா

தேசத்தின் பண்டைய சிலைகள் மற்றும் கலைச்சின்னங்கள் களவாடப்பட்டு அயல் நாடுகளில் விற்கப்பட்டு விட்டன. இவற்றை நாங்கள் மீட்டெடுத்து வந்திருக்கிறோம். 2014-ம் ஆண்டுக்கு பிறகு 600-க்கும் அதிகமான தொன்மையான கலைப்படைப்புகள் உலகின் பல நாடுகளில் இருந்தும் பாரதம் வந்தன. இவற்றில் 36 கலைப்பொருள்கள் தமிழகத்தைச் சேர்ந்தவை.

நமது மரபும், சைவ தத்துவத்தின் முத்திரை பாரதம் வரை மட்டுமோ அல்லது இந்த பூமியுடன் நின்று விடவில்லை. நிலவின் தென் துருவத்தில் இறங்கிய முதல் தேசம் பாரதம். நிலவின் அந்த இடத்துக்கு சிவசக்தி என பெயர் சூட்டினோம். அந்த பகுதி சிவசக்தி பெயரில் அடையாளம் காணப்படும்.

சோழர்கள் காலத்தில் உன்னத உயரங்களை பாரதம் தொட்டது. ராஜராஜ சோழன் சக்தி வாய்ந்த கடற்படையை உருவாக்கினார். இராஜேந்திர சோழன் இதை பலப்படுத்தி உறுதிப்படுத்தினார். அவருடைய காலக்கட்டத்தில் பல்வேறு நிர்வாக மேம்பாடுகள் முறைப்படுத்தப்பட்டன.

உள்ளூர் நிர்வாக அமைப்பை சக்தி உடையதாக ஆக்கினார். பலமான நிதி வழிமுறையை அமல் செய்தார். வியாபார உயர்வு, கடல் மார்க்கங்களின் பயன்பாடு, கலை மற்றும் கலாச்சாரத்தின் பிரச்சாரம் இப்படியாக பாரதம் அனைத்து திசைகளிலும் விரைவாக முன்னேறி கொண்டி இருந்தது.

மோடி

சோழ சாம்ராஜ்யம் புதிய பாரதத்தின் நிர்மாணத்திற்கான பழமையான சாலை வரை படம் போன்றது. நாம் வளர்ச்சியடைந்த தேசத்தை உருவாக்க வேண்டும் என்று சொன்னால் நாம் ஒற்றுமையின் மீது அழுத்தம் அளிக்க வேண்டும். நமது கடற்படை, பாதுகாப்பு படைகளை பலமுள்ளவைகளாக ஆக்க வேண்டும். புதிய சந்தர்ப்பங்களை தேடி கொண்டே இருக்க வேண்டும். இந்த தேசம் உத்தவேகத்தை தாண்டி முன்னேறி வருவது உத்வேகத்தை அளிக்கிறது.

இன்றைய பாரதம் அனைத்தையும் விட தனது பாதுகாப்பை பெரிதாக கருதுகிறது. யாராவது பாதுகாப்பு மற்றும் இறையாண்மை தாக்குதல் தொடுத்தால் எப்படிப்பட்ட பதிலடி கொடுக்கும் என்பதை ஆபரேஷன் சிந்தூரின் போது உலகமே உற்று பார்த்தது.

பாரதத்தின் எதிரிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் எந்த ஒரு மறைவிடமும் பாதுகாப்பானது கிடையாது என்பதை சிந்தூர் வெளிச்சம் போட்டு காட்டியது. நான் இறங்கியே போது ஹெலிபேடு தரையை தொட்டேன். 4 கிலோ மீட்டர் ரோடு ஷோ வந்தேன். அனைவரும் ஆபரேஷன் சிந்தூர் என கோஷமிட்டனர். இதே உணர்வு நாடு முழுவதும் உள்ளது. நம் நாட்டில் மட்டுமல்ல உலகமே இதை கண்டு வியக்கிறது. நமது வல்லமையை உலகம் தெரிந்து கொண்டுள்ளது.

திருவாதிரை விழா

இராஜேந்திர சோழன் பணிவு

தன் தந்தையார் எழுப்பிய கோபுரம் அனைத்தையும் விட உயரமாக இருக்க வேண்டும் என்பதை தக்க வைக்கவே தான் கட்டிய கோயில் கோபுரத்தை சின்னதாக அமைத்தார். இதையே விரும்பினார். தனது மகத்துவத்தின் இடையே மிகுந்த பணிவை இராஜேந்திர சோழன் வெளிப்படுத்தினார். இன்றைய பாரதம் இதே உணர்வில் முன்னேறி கொண்டிருக்கிறது, நாம் தொடந்து பலமடைந்து வருகிறோம். ஆனாலும் நமது உணர்வுகள் உலகத்தின் நண்பனுக்கானவை, உலக நலனுக்கானவை.

வர இருக்கும் காலங்களில் நாம் தமிழ் நாட்டில் இராஜேந்திர சோழன் பிரமாதமான உருவ சிலையை நிர்மாணம் செய்வோம். இந்த சிலை வரலாற்று விழிப்புணர்வின் நவீன கொடி மரங்கள் ஆகும். இன்று அப்துல் கலாமின் நினைவு தினம். வளர்ச்சியடைந்த பாரதத்திற்கு தலைமை தாங்க டாக்டர் கலாம், சோழப் பேரரசர்களை போன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் தேவை. இவர்கள் 140 கோடி மக்களின் கனவுகளை நிறைவேற்றுவார்கள். நாம் அனைவரும் இணைந்து ஒரே பாரதம், ஒரே உன்னத பாரதத்திற்கான உறுதிப்பட்டை முன்னெடுத்து செல்வோம். இந்த உணர்வுடன் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன், வணக்கம்.” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *