
ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2-ம் சீசனுக்காக 60 வகையான, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வண்ண மலர்ச் செடிகள், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2 லட்சம் விதைகள் மற்றும் நாற்றுகளை நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கர்நாடக அரசு பூங்காவில் மஞ்சள் நிறத்தில் நடன மங்கை ஆடுவதைப்போல காட்சிதரும் ‘ஆனிசைடம்’ என்றழைக்கப்படும் ஆர்கிட் மலர்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன. அந்த மலர்களின் அருகில் நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர்.