
சென்னை: தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பல்வேறு புதிய கட்டமைப்புகளை உருவாக்கி பொதுப்பணித் துறை சாதனை புரிந்துள்ளதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொதுப்பணித் துறை, தமிழகத்தின் வளம பெருக்கும் கட்டமைப்புகளை, வரலாற்றுச் சிறப்புமிக்க கலைச் சின்னங்களை உருவாக்கும் பெருமைக் குரியதுறையாகும். துறை சார்பில் வள்ளுவர் கோட்டம், ரூ.80 கோடியில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.