• July 27, 2025
  • NewsEditor
  • 0

பீகாரில் ஒரு வயது குழந்தை கடித்து நாகப்பாம்பு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தச் சம்பவமானது மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் நடந்திருக்கிறது.

அந்தக் குழந்தையை குடும்பத்தினர் பெட்டியா நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் இச்சம்பவம் வெளியில் தெரியவந்திருக்கிறது.

பாம்பு

இது குறித்து பேசிய மருத்துவமனை கண்காணிப்பாளர் துவகந்த் மிஸ்ரா, “கோவிந்த் குமார் என்ற சிறுவன் உயிருடன் இருந்த பாம்பைக் கடித்ததால் முதலில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் இங்கு கொண்டுவரப்பட்டார்.

மஜ்ஹௌலியா பகுதிக்குட்பட்ட மொஹச்சி பங்கட்வா கிராமத்தில் உள்ள தங்கள் வீட்டில், சிறுவன் பாம்பைப் பிடித்ததாக குடும்ப உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

அவர்களின் கூற்றுப்படி, சிறுவனின் பாட்டி அதைப் பார்த்திருக்கிறார்.

பாம்பு
பாம்பு

ஆனால், அதற்குள் சிறுவன் அந்த பாம்பைக் கடித்திருக்கிறார். கொஞ்ச நேரத்தில் பாம்பு அங்கே இறந்து கிடந்திருக்கிறது.

சிறுவனும் அதன் அருகிலேயே மயங்கி கிடந்திருக்கிறான். அதன்பிறகுதான் அவர்கள் சிறுவனை மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

சிறுவனின் உடல்நிலை மருத்துவர்கள் குழுவால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சிறுவனின் உடலில் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக விஷத்திற்கான சிகிச்சை தொடங்கப்படும்” என்று கூறினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *