
தமிழகத்தில் அதிக நாட்கள் முதல்வர் பதவி வகித்ததில் பழனிசாமியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்னுக்கு தள்ளியுள்ளார். இதனால், இதுவரை நீண்ட காலம் முதல்வராக இருந்தவர்கள் பட்டியலில் 6-வது இடத்தில் இருந்த ஸ்டாலின் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
சுதந்திரதுக்கு பிறகு தமிழகத்தில் 11 பேர் முதல்வர் பதவி வகித்துள்ளனர். இதில், 19 ஆண்டுகள் ( 1969, 1971, 1989, 1996, 2006 என 5 முறை ) முதல்வராக இருந்த கருணாநிதி, அதிக ஆண்டுகள் முதல்வர் பதவியை வகித்தவர் என்ற பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.