
புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது ஆதார் ஆவணத்தை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி ஏடிஆர் தன்னார்வ தொண்டு அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடைபெற்று வருகிறது.