
புதுடெல்லி: மேற்கு உ.பி.யின் மீரட் மாவட்டம், தாத்ரி கிராமத்தில் சிவன் கோயில் உள்ளது. இதன் பூசாரியாக கிருஷ்ணா என்ற பெயரில் இளைஞர் ஒருவர் கடந்த ஒரு வருடமாக பணியாற்றி வந்தார். கோயிலின் உள்ளேயே தங்கிவந்த அவரது நடவடிக்கையில் கிராமவாசிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இத்துடன், கோயில் உண்டியலில் பணம் குறைவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவரது ஆதார் அட்டையை வாங்கிப் பார்த்த பிறகு அவர் கிருஷ்ணா அல்ல காசீம் எனத் தெரியவந்ததது.
பிறகு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட காசீம் கைது செய்யப்பட்டார். விசாரணையில், காசீம் பிஹாரின் சீதாமடியைச் சேர்ந்த அல்தாப் என்பவரின் மகன் எனத் தெரியவந்தது. இதற்கிடையில் கோயிலின் புனிதம் கெட்டுவிட்டதாக கருதப்பட்டதை தொடர்ந்து. அகில இந்திய இந்து பாதுகாப்பு சங்கத்தின் தலைவரான சச்சின் சிரோஹி தனது சகாக்களுடன் கங்கை நீர் மற்றும் பால் ஊற்றி கோயிலை சுத்தப்படுத்தினார்