
சென்னை: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை 2 மாதங்களில் அகற்ற வேண்டும் என்று ஈரோடு மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகில் உள்ள காலப்புரான்கோட்டையை சேர்ந்த எஸ்.சண்முகம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “எங்கள் பகுதியில் உள்ள கொந்தளம் கிராமத்தில் ஓடை புறம்போக்கு மற்றும் மயானத்திற்கான செல்லும் வழிப்பாதை உள்ளது. இந்த இடத்தை பலர் நீண்ட காலமாக ஆக்கிரமித்து வருகிறார்கள். இந்த ஆக்கிரமிப்புகளால் பொது மக்கள் மயானத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மயானத்துக்கு செல்லும் பாதை முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.