• July 26, 2025
  • NewsEditor
  • 0

கொலம்பியாவைச் சேர்ந்த கிறிஸ்டியன் மொன்டெனேக்ரோ, தனிமையில் இருந்து விடுபட, 2023 ஆம் ஆண்டு நடாலியா என்ற துணிப்பொம்மையுடன் உறவைத் தொடங்கினார். இவர்களுக்கு மூன்று பொம்மைக் குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் சாமி என்ற புதிய பொம்மைக் குழந்தையை வரவேற்றுள்ளனர். கிறிஸ்டியன், நடாலியாவுடனான தனது உறவைப் பற்றி சமூக வலைதளங்களில் அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

இவரது உறவு தொடர்ந்து வலுவாக இருப்பதாகவும், இந்தக் குடும்பம் மகிழ்ச்சியாக வாழ்வதாகவும் அவர் கூறுகிறார். இந்த பதிவு இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு பயனர்கள் ஆச்சரியமடைந்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இது குறித்து Treat My OCD இணையதளத்தில், NOCD இன் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பேட்ரிக் மெக்ராத் கூறுகையில், “பொருள் காதல் கொண்டவர்கள் தாங்கள் உண்மையாகவே அந்தப் பொருளுடன் காதலில் இருப்பதாக உணர்கின்றனர்.

மேலும் அதனுடன் ஒரு உறவு இருப்பதாக நம்புகின்றனர். பொருள் காதல் (Objectophilia) என்பது உயிரற்ற பொருட்களின் மீதான அதீத காதல், உணர்ச்சி அல்லது பாலியல் ஈர்ப்பு கொள்ளும் ஒரு அரிய நிலையாகும்.

இந்த காதல் பொம்மைகள், சுவர்கள், கார்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவற்றுடன் மனிதர்கள் ஆழமான உணர்ச்சிப் பிணைப்பை உருவாக்குகின்றனர்.

இவர்கள் இந்தப் பொருட்களுடன் நேரம் செலவழித்து, மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து, வாக்குவாதங்கள் செய்கின்றனர். பொருள் காதல் என்பது புரிந்து கொள்ள கடினமான ஒரு உணர்வு நிலையாக இருந்தாலும், இதில் ஈடுபடுவோர் தங்கள் உறவுகளை மனிதர்களுடனான உறவுகளைப் போலவே உணர்கின்றனர்.” என்று கூறியிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *