
பாட்னா: பிஹார் மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு நிலைமை கட்டுப்பாட்டை மீறிவிட்டதாகவும், குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் ஓர் அரசை ஆதரிப்பது வருத்தமாக இருப்பதாகவும் மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான சிராக் பாஸ்வான் கூறினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிராக் பாஸ்வான், “குற்றங்கள் அதிகரித்து வரும் ஓர் ஆட்சியை ஆதரிப்பது வருத்தமாக உள்ளது. பிஹாரில் கொலை, கொள்ளை, கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அரசு நிர்வாகம் குற்றவாளிகளுக்கு முன் முற்றிலும் அடிபணிந்துள்ளது. பிஹாரில் உள்ள மக்கள் தங்களை பாதுகாப்பாக உணரவில்லை என்றும், குற்றச் செயல்கள் ஏன் குறையவில்லை என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.