• July 26, 2025
  • NewsEditor
  • 0

மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை தொடங்கி நடைபெற்றது. இதில் உலக சாதனை படைத்துள்ள டிம் டேவிட், தான் சாதனைகளுக்காக விளையாடவில்லை எனப் பேசியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, 214 ரன்கள் குவித்தது. இந்த அபாரமான இலக்கை 16.1 ஓவரில் சேஸ் செய்து வெற்றிபெற்றது ஆஸ்திரேலியா அணி.

tim david

ஆல்ரவுண்டர் டிம் டேவிட் 16 பந்துகளில் அரைசதம் 37 பந்துகளில் சதம் என அதிரடியாக விளையாடி பல சாதனைகள் படைத்துள்ளார்.

இதன் மூலம் குறைந்த பந்துகளில் அரை சதம், சதம் அடித்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் என்ற சாதனையைப் படைத்தார்.

கடைசியாக ஐபிஎல்லில் விளையாடிய போது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பிளே ஆஃபுக்கு எடுத்துச்செலும் முக்கிய போட்டியில் டிம் டேவிட்டுக்கு தொடையில் தசை நார் காயம் ஏற்பட்டது.

Tim David

சிகிச்சை மூலம் காயத்திலிருந்து மீண்டுள்ள டிம், மே 23ம் தேதிக்குப் பிறகு முதல்முறையாக களமிறங்கிய போட்டியிலேயே அதிரடியாக விளையாடியுள்ளது ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

‘நான் சாதனைகளுக்காக விளையாடவில்லை’

போட்டிக்குப் பிறகு பேசிய டிம் டேவிட், “டாப் ஆர்டரில் விளையாட வேண்டுமென நினைக்கவில்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நன்றாக விளையாட நினைக்கிறேன்.

எனக்கு சிறியதாக உடல் உபாதைகள் இருந்தன. வீட்டில் ஓய்வெடுத்தது நன்றாக இருந்தது.

ஆஸ்திரேலிய அணிக்காக சதம் அடிப்பது என்பது எனக்கும் சிறுவயது கனவு. சதம் அடிக்கும் வாய்ப்பு கிடைக்குமென அதிகமாக யோசிக்கவில்லை. நான் சாதனைகளுக்காக விளையாடவில்லை.

இந்த ஆடுகளம் நன்றாக இருந்தது. பவுண்ட்ரி எல்லைகளும் சிறியதாக இருந்தன. என்னுடைய அனுபவத்தை உபயோகித்து விளையாடினேன்” எனக் கூறியுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *