• July 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​நாமக்​கல்லில் நடந்​தது கிட்னி திருட்டு அல்ல, முறை​கேடு என அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் கூறியதற்கு தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்​தில் அவர் கூறியிருப்பதாவது: நாமக்​கல் விசைத்​தறி தொழிலா​ளர்​களுக்கு நடந்​தது ‘கிட்னி திருட்டு இல்​லை, முறை​கேடு’ என தமிழக சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் சொல்​கிறார்.

ஒரு​வரின் ஏழ்​மை​யைப் பயன்​படுத்தி அவரின் உடல் உறுப்​பு​களை திருடு​வதை முறை​கேடு என்று சொல்​வ​தா? இந்த விவ​காரத்​தில் இடைத்​தரக​ராக செயல்​பட்ட திமுக நிர்​வாகி திரா​விட ஆனந்​தன் இன்​று​வரை கைது செய்​யப்​ப​டா​மல் இருப்​பது ஏன், கிட்னி திருட்டில் தொடர்​புடைய திமுக​வின் மண்​ணச்​சநல்​லூர் சட்​டப்​பேரவை உறுப்​பினர் நடத்​தும் மருத்​து​வ​மனை மீது ஏதோ கண்துடைப்பு நடவடிக்கை எடுத்​து​விட்​டால் போது​மா? இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *