• July 26, 2025
  • NewsEditor
  • 0

மும்பை தாதரில் வசிப்பவர் ரஞ்சித் தேஷ்முக் (48). ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக வேலை செய்து வருகிறார். அதோடு அரசு நிறுவனம் ஒன்றில் பாய்லர் ஆப்ரேட்டராகவும் இருக்கிறார். இவருக்கு ஷில்பா(51) என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இவர்களது நட்பு காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர்.

ஷில்பா ஏற்கனவே திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறார். ரஞ்சித்தை திருமணம் செய்ய தனது கணவரை விவாகரத்து செய்வதாக ஷில்பா தெரிவித்தார். இதே போன்று ரஞ்சித்தும் ஷில்பாவை திருமணம் செய்ய தனது மனைவியை விவாகரத்து செய்வதாக தெரிவித்தார்.

ரஞ்சித் தான் சொன்னபடி தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். ஆனால் ஷில்பா தனது கணவரை விவாகரத்து செய்யாமல் இழுத்தடித்து வந்தார். அதோடு ரஞ்சித்திடம் வீடு வாங்கவேண்டும் என்று கூறி ஷில்பா 5 லட்சம் ரூபாய் வாங்கி இருந்தார்.

மேலும் ரஞ்சித்திடம் அவரது பி.எப் கணக்கில் மனைவி என்ற இடத்தில் தனது பெயரை சேர்க்கும்படி கூறி ஷில்பா நிர்ப்பந்தம் செய்து வந்தார். ஆனால் திருமணத்திற்கு முன்பு பெயரை சேர்க்க முடியாது என்று ரஞ்சித் கூறி வந்தார். அதோடு ரஞ்சித் பெயரில் இருந்த சொத்துகளை தனது பெயருக்கு எழுதி கொடுக்கும்படி ஷில்பா நிர்ப்பந்தம் செய்து வந்தார். ஆனால் அதனையும் ரஞ்சித் ஏற்கவில்லை.

ஷில்பா தனது கணவரையும் விவாகரத்து செய்யாமல் இழுத்தடித்து வந்ததால் தனது பி.எப் வங்கிக்கணக்கில் ஷில்பா பெயரை சேர்க்காமல் ரஞ்சித் இழுத்தடித்து வந்தார். ஷில்பா தனது கணவரை விவாகரத்து செய்யாததால் ரஞ்சித் கடந்த மாதம் வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொண்டார். இதனால் கோபம் அடைந்த ஷில்பா தனது மகன் மற்றும் அடியாள்களுடன் சென்று ரஞ்சித்தை அடித்து தாக்கியுள்ளார்.

தாக்குதல் சம்பவம்.. என்ன நடந்தது?

சம்பவம் நடந்த அன்று, ரஞ்சித் தனது வேலையை முடித்துவிட்டு நவிமும்பையில் இருந்து வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவர் இரவில் சயான்-பன்வெல் சாலையில் சென்ற போது இரவு 9 மணிக்கு அவரது இரு சக்கர வாகனத்தை வேறு இரண்டு இருசக்கர வாகனங்கள் மடக்கி நிறுத்தின. அதில் இருந்தவர்கள் ரஞ்சித் இரு சக்கர வாகனத்தின் சாவியை பிடுங்கினர். அதோடு அந்த வாகனத்தை மிதித்து கீழே தள்ளினர்.

அதற்குள் அங்கு ஷில்பாவும், வேறு சிலரும் வந்தனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து ரஞ்சித்தை சரமாரியாக அடித்தனர். முகத்தில் ஓங்கி குத்தினர். பின்னர் அவரை ஆட்டோ ஒன்றில் கடத்திச்சென்றனர். ஆட்டோவை செம்பூர், மான்கூர்டு வழியாக கார்கர் கடத்தி சென்றனர். ஆட்டோவில் செல்லும்போது தொடர்ந்து அடித்து உதைத்து வந்தனர். ஒரு இடத்தில் ஆட்டோ சிக்னலுக்காக நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரஞ்சித் ஆட்டோவில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார். அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி உதவி கேட்டு அங்கிருந்து தப்பினார்.

புதுச்சேரி | கைது

அவர் கார் டிரைவரிடம் போன் வாங்கி தனது தந்தையிடம் பேசினார். அவரின் வேண்டுகோள்படி காரை சுன்னாப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு நிலையத்திற்கு திருப்பும்படி ரஞ்சித் கேட்டுக்கொண்டார். கார் சுன்னாப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது ஷில்பாவும் அவரது ஆட்களும் ரஞ்சித் காரை மடக்கினர். அவர்கள் ரஞ்சித்தை காரில் இருந்து தங்களது ஆட்டோவிற்கு மாற்றி மீண்டும் அடித்து உதைத்தனர்.

பின்னர் அவரை தெருவில் தள்ளிவிட்டு சென்றுவிட்டனர். இதையடுத்து ரஞ்சித் தனது நண்பருக்கு போன் செய்து வரவழைத்தார். அவர் மூலம் வேறு உடைகளை மாற்றிக்கொண்டு இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து ஷில்பா, அவரது மகன் பரத் உட்பட 7 பேரை கைது செய்துள்ளனர். ரஞ்சித் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கும் ரஞ்சித்தால் சரியாக பேசக்கூட முடியவில்லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *