• July 26, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: தொடர்ந்து 4,078 நாட்​களாக பிரதமர் பதவி​யில் அமர்ந்​து, முன்​னாள் பிரதமர் இந்​திரா காந்​தி​யின் சாதனையை பிரதமர் நரேந்​திர மோடி முறியடித்​துள்​ளார். பிரதமர் நரேந்​திர மோடி பதவி​யேற்று நேற்​றுடன் (ஜூலை 25) 4,078 நாள்​களை நிறைவு செய்​துள்​ளார். இதன் மூலம், முன்​னாள் பிரதம​ரான மறைந்த இந்​திரா காந்​தி​யின் பதவிக்​கால​மான, தொடர்ச்​சி​யாக 4,077 நாள்​கள் நாட்​டின் பிரதம​ராகப் பதவி வகித்​திருந்த சாதனையை மோடி முறியடித்​துள்​ளார்.

1966-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி முதல் 1977-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி வரை இந்​திரா காந்தி தொடர்ச்​சி​யாக பிரதம​ராகப் பதவி வகித்​திருந்​தார். இதன்​மூலம் அவர் தொடர்ச்​சி​யாக 4077 நாட்​கள் பிரதமர் பதவி​யில் இருந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *