• July 26, 2025
  • NewsEditor
  • 0

சமூக நீதி, வன்​முறை​யில்லா வாழ்​வு, வேலை, விவ​சா​யம் மற்​றும் உணவு, வளர்ச்​சி, கல்வி உள்​ளிட்ட 10 வகை​யான அடிப்​படை உரிமை​களை மீட்டெடுத்து தமிழக மக்​களுக்கு வழங்க வேண்​டும், தமிழக மக்​களுக்கு நல்​லாட்சி கிடைக்க வகை செய்ய வேண்டும் என வலி​யுறுத்​தி ராம​தாஸின் பிறந்த நாளான நேற்று (ஜூலை 25) தமிழக மக்​கள் உரிமை மீட்​புப் பயணத்​தைத் தொடங்​கப்​போவ​தாக அன்​புமணி அறி​வித்​தார்.

'உரிமை மீட்​க… தலை​முறை காக்க' என்ற இலச்​சினையை​யும், ‘ உரிமைப் பயணம் ’ என்ற தலைப்​பில் பிரச்​சார பாடலை​யும் அன்புமணி வெளி​யிட்டார். இதனையடுத்து இந்த நடைபயணத்​தால் வடதமிழகத்​தில் சட்​டம் ஒழுங்கு சீர்​கெடும் என்றும், தனது அனுமதியின்றி பாமக பெயர், கொடியை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்க கோரி டிஜிபி அலு​வல​கத்​தில் ராம​தாஸ் மனு அளித்​தார். எனினும், திட்டமிட்டபடி நேற்று திருப்போரூரில் நடைபயணத்தை தொடங்​கி​னார் அன்புமணி. முரு​கன் கோயி​லில் வழி​பாடு நடத்தி​விட்​டு, அம்​பேத்​கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *