
கே.பாக்யராஜ் இயக்கி நடித்து 1981-ல் வெளியாகி வெற்றி பெற்றபடம், ‘அந்த 7 நாட்கள்'. அதே தலைப்பை இப்போது புதிய படத்துக்கு வைத்துள்ளனர். காதல் – த்ரில்லர் படமான இதில் அஜித் தேஜ், ஸ்வேதா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பாக்யராஜ், நமோ நாராயணன், சுபாஷினி கண்ணன், தலைவாசல் விஜய்உள்பட பலர் நடித்துள்ளனர். எம்.சுந்தர் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு சச்சின் சுந்தர் இசையமைத்துள்ளார். கோபிநாத் துரை ஒளிப் பதிவு செய்துள்ளார். பெஸ்ட்காஸ்ட் ஸ்டூடியோஸ் தயாரிப்பாளர் முரளிக பீர்தாஸ் தயாரித்துள்ளார்.