
காரைக்குடி: பழங்குடி மக்களை தாக்கும் ‘சிக்கிள் செல் அனீமியா’ என்ற அரிய நோய்க்கு குறைந்த செலவில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் என்.கலைச்செல்வி கூறினார். மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுக் குழுமத்தின் கீழ் (சிஎஸ்ஐஆர்) காரைக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (செக்ரி) 78-வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் என்.கலைச்செல்வி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சத்தீஸ்கர், ஒடிசா, பிஹார், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பழங்குடி மக்களை ‘சிக்கிள் செல் அனீமியா’ என்ற அரியவகை நோய் தாக்குகிறது. இதற்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் சிஎஸ்ஐஆர் கடந்த 8 ஆண்டுகளாக ஈடுபட்டது.