
தெலுங்கு நடிகர் ஆத்வி சேஷ் நடித்து வரும் படம் ‘டக்கோயிட்: எ லவ் ஸ்டோரி’. இது தெலுங்கு, தமிழ், இந்தி உள்பட ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. நாயகியாக மிருணாள் தாக்குர் நடிக்கிறார். அனுராக் காஷ்யப், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடிக்கின்றனர். ரொமான்டிக் ஆக் ஷன் படமான இதை ஷேனியல் டியோ இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது.
கடுமையான சண்டைக் காட்சியை படமாக்கி வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தில் ஆத்வி சேஷுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதே காட்சியில் நடித்துக் கொண்டிருந்த மிருணாள் தாக்குருக்கும் சிறு காயம் ஏற்பட்டது. இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து ஆத்வி சேஷ் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்தார். மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்குமாறு கூறியுள்ளனர்.