
சென்னை: தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனே கூட்ட மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஜன.1-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி இந்த ஆண்டும் வழக்கம்போல சுருக்க முறை திருத்தமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.