
சென்னை: தமிழக மக்கள் உரிமை மீட்பு எனும் தலைப்பில் பாமக தலைவர் அன்புமணி மேற்கொள்ளும் நடைபயணம் திருப்போரூரில் நேற்று தொடங்கியது. பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து வலுத்து வரும் நிலையில் இரு தரப்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாக ராமதாஸின் பிறந்த நாளான ஜூலை 25-ம் தேதி தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தைத் தொடங்கப்போவதாக அன்புமணி அறிவித்தார். இந்த நடைபயணத்தால் வடதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்பதால் தடை விதிக்கக்கோரி டிஜிபி அலுவலகத்தில் ராமதாஸ் மனு அளித்தார்.