• July 23, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பாஜக​வின் கொள்​கைகளை எதிர்க்​கும் சமாஜ்வாதி ​கட்சி இந்​துத்​து​வாவுக்கு எதி​ரான நிலைப்​பாட்​டில் இருப்பதாகவே கருதப்​படு​கிறது. இந்​நிலை​யில் வரும் 2027 உ.பி. தேர்​தலை முன்​னிட்டு அக்​கட்​சி​யின் நடவடிக்​கை​களில் மாற்​றம் ஏற்பட்டுள்​ளது. உ.பி.​யில் தற்​போதைய ஷ்ராவண மாதத்​தில் சமாஜ்​வாதி சார்​பில் காவடி யாத்​திரைகளுக்கு ஏற்​பாடு செய்யப்பட்டது.

இதற்கு முன்​பாக கேதார்​நாத்​தில் இருப்​பது போன்ற ஒரு சிவன் கோயிலை விரைந்து கட்டி முடிப்​ப​தில் சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் யாதவ் இறங்கி உள்​ளார். இந்த கோயில், அகிலேஷின் சொந்த ஊரான எட்​டா​வா​வின் சபாரி பூங்கா அருகே 2021 முதல்கட்​டப்​பட்டு வரு​கிறது. இது​போன்ற நடவடிக்கை மூல​மாக சமாஜ்​வாதி இந்​துத்​துவா ஆதரவு நிலைப்​பாட்டை எடுக்க முயல்வ​தாக கருதப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *