
புதுடெல்லி: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த மாதம் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அதில் எரிபொருள் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போயிங் ட்ரீம்லைனர் விமானங்களின் இன்ஜின் எரிபொருள் சுவிட்சுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று அனைத்து விமான நிறுவனங்களுக்கும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டது.