• July 23, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி மும்பை புறநகர் ரயில்​களில் அடுத்​தடுத்து குண்​டு​கள் வெடித்​த​தில் 189 பேர் உயி​ரிழந்​தனர். 800-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இது தொடர்​பாக 12 பேர் கைது செய்​யப்​பட்​டனர். இந்த வழக்கை விசா​ரித்த மும்பை சிறப்பு நீதி​மன்​றம் கடந்த 2015-ம் ஆண்டு 12 பேரும் குற்​ற​வாளி​கள் என தீர்ப்பு வழங்​கியது. இவர்​களில் 5 பேருக்கு மரண தண்​டனை​யும் 7 பேருக்கு ஆயுள் தண்​டனை​யும் விதிக்​கப்​பட்​டது.

இதையடுத்​து, குற்​ற​வாளி​கள் சார்​பில் மும்பை உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இந்த மனுவை விசா​ரித்த உயர் நீதிமன்றம், குற்​ற​வாளி​கள் மீதான குற்​றச்​சாட்​டு​களை ஆதா​ரத்​துடன் நிரூபிக்க அரசுத் தரப்பு தவறி​விட்​ட​தாகக் கூறி 12 பேரை​யும் விடு​தலை செய்​யு​மாறு திங்​கள்​கிழமை உத்​தர​விட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *