
ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ல் வெளியாகி, மாபெரும் வெற்றி பெட்ரா படம் ‘அவதார்’. உலக அளவில் அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையை இந்தப் படம் பெற்றுள்ளது.
இதன் அடுத்த பாகம் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’, 2022-ம் ஆண்டு வெளியாகி வசூலில் சாதனை படைத்தது. இதன் 3-ம் பாகமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ இந்த ஆண்டு டிச.19-ம் தேதி வெளியாக இருக்கிறது. சாம் வொர்த்திங்டன், ஸோயி சல்டானா, சிகோனி வீவர், ஸ்டீபன் லங் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.