
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996-ம் ஆண்டு வெளியான படம் ‘இந்தியன்’. இதில் ஊழலை எதிர்க்கும் இந்தியன் தாத்தாவாக கமல்ஹாசன் நடித்திருந்தார். அவர் கதாபாத்திரம் பேசப்பட்டது.
இதன் அடுத்த பாகமான, ‘இந்தியன் 2’ சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு வெளியானது. கமல்ஹாசனுடன் சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் என பலர் நடித்தனர். இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. படம் வெளியாகும் முன்பே இதன் 3-ம் பாகம் உருவாக இருப்பதாகக் கூறப்பட்டது. ‘இந்தியன் 2’ எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாததால் 3-ம் பாகம் வருவது சந்தேகம் எனக் கூறப்பட்டது.