
சென்னை: குளறுபடிகளின் உச்சமாக இருக்கும் குரூப்-4 தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 12-ம் தேதி நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு தொடங்கும் முன்னரே, மதுரையில் வினாத்தாள் ஒரு தனியார் ஆம்னி பேருந்தில், முறையாக சீலிடப்படாமல், கதவின் மேல் ஒரு ஏ4 ஷீட் ஒட்டப்பட்ட நிலையில் அனுப்பப்பட்டது சர்ச்சையானது. பிறகு, தேர்வு வினாத்தாளில் பல கேள்விகள், குறிப்பாக தமிழ்ப் பாடக்கேள்விகள், பாடத்திட்டத்துக்கு அப்பாற்பட்டு இருந்ததாக பல்வேறு தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.